Women Have Equal Rights High Court Chief Justice questioned

பெண்களுக்கு சம உரிமை இருக்கிறதா என்ற சந்தேகம் தனக்கு எழுவதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார். மதுரை கே.கே.நகரில் ஈடேற்றும் சமத்துவம் என்ற நூல் வெளியிட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய இந்திரா பானர்ஜி நீதிபதி பதவி என்பது பணி அல்ல. சேவை. அது பேச்சு வார்த்தைக்குஅப்பாற்றபட்டது. அதன் மூலம் நீதியை நிலைநாட்ட வேண்டும். மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுக்க சட்டம் உண்டு. அதற்கு பணிக்கு ஆட்களை நியமிப்பவர்களை தண்டிக்க சட்டத்தில் இடம் உண்டு. 

தமது வளர்ச்சிக்கு காரணம் தமது தாய் என்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் 63 நீதிபதிகளில் 12 பேர் மட்டுமே என குறிப்பிட்ட அவர், இதன் மூலம் பெண்களுக்கு சம உரிமை இருக்கிறதா என்ற கேள்வி எழுவதாக கூறினார். 5-க்கு ஒன்று என்ற விகிதத்தில் பெண் நீதிபதிகள் இருப்பதாகவும், கூடிய விரைவில் இந்த விகிதம் உயரும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். குழந்தைகளுக்கு வீட்டில் இருந்தே சமத்துவத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.