திருவண்ணாமலை அருகே கிணற்றில் விழுந்த பெண் ஒருவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பாய்ச்சல் பகுதியில் வசித்து வருபவர் சரோஜா.

இவர் தனது வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் விழுந்துள்ளதை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் செங்கம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சரோஜாவை பத்திரமாக மீட்டனர். அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக கணேசன் என்பவர், சரோஜாவை கிணற்றின் உள்ளே தள்ளிவிட்டு கொலை செய்ய முன்றதாக தெரியவந்துள்ளது.

தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்