பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக புதிய திட்டத்தை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.

நாட்டில் பெரும்பாலான இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே பெண்களின் பாதுகாப்புக்காக அரசும், காவல்துறையும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்கள் பாதுக்காப்புக்காக புதிய திட்டம் ஒன்றை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிஅதன்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்களை ரோந்து வாகனத்தில் அழைத்து செல்ல காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

நிதிநுட்ப நகரம் கட்டுமான ஒப்பந்தம்: தமிழக அரசு விளக்கம்!

காவல்துறை உதவி தேவைப்படும் பெண்கள், காவல்துறையின் 1091,112, 044-2345 2365, 2844 7701 ஆகிய காவல்துறை உதவி எண்களுக்கு அழைக்கலாம். பெண்கள் இருக்கும் இடத்திற்கே வந்து ரோந்து வாகனம் அழைத்து செல்லும். அனைத்து நாட்களிலும் இந்த சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ்நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

செந்தில் பாலாஜிக்கு என்ன ஆச்சு? மனித உரிமைகள் ஆணையம் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்!