திருமணம் செய்ய மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு...!
கன்னியாகுமரி அருகே கணவனை இழந்த பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திருந்த நிலையில், ஆசிட் வீசிவிட்டு அந்த நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி அருகே கணவனை இழந்த பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திருந்த நிலையில், ஆசிட் வீசிவிட்டு அந்த நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே ஈச்சங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கிரிஜா. இவரது கணவர் மணிகண்டன். வெளிநாட்டில் கொத்தனாராக வேலை செய்தார். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். மணிகண்டன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்த நாட்டில் இறந்துவிட்டார். இதனால் கிரிஜா தனது மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
தனியாக வசித்த கிரிஜாவுக்கு அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஜான் ரோஸ் என்பவர் உதவியாக இருந்து வந்துள்ளார். இதை பயன்படுத்தி ஜான் ரோஸ் கிரிஜாவை திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கிரிஜாவிடம் கூறிய போது திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இருப்பினும் விடாமல் ஜான் ரோஸ் தொடர்ந்து அவரை வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து வலியுறுத்தியும் கிரிஜா தனது காதலை ஏற்றுக்கொள்ளாததால் ஆத்திரமடைந்த ஜான் ரோஸ் கிரிஜா மீது ஆசிட்டை ஊற்றியுள்ளார். கிரிஜாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனே மருத்தவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே ஆசிட் வீசிய ஜான் ரோஸ் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். ஆசிட் மற்றும் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.