woman sexually abuse the school boy

தன்னை படிக்க வைப்பதாக அழைத்து வந்து, 45 வயது பெண் ஒருவர் தன்னை பாலியல் தொந்தரவு செய்து வருவதாக 17 வயது பள்ளி மாணவன் ஒருவன் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த, துரை மற்றும் சுமதி தம்பதியர் டப்பிங் ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் கடந்த 3 வருடத்திற்கு முன் கேரளாவிற்கு சென்ற போது, சாப்பாட்டுக்கே கஷ்டப்படும், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சிறுவனை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

அந்த சிறுவனை, தாங்கள் படிக்க வைப்பதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

சென்னைக்கு வந்த அந்த சிறுவன், ஸ்டுடியோவில் தங்கி பள்ளிக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுவன் குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவுக்கு போன் செய்து, சுமதி தன்னை தினமும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார் என்றும் , ஆபாச புகைப்படங்களையும், வீடியோவையும் தனக்கு அனுப்பதாகவும் இதனால் ஒவ்வொரு நாளும் தான் நரக வேதனை அனுபவித்து வருவதாகவும் சுமதி அருகே சென்றால் தன்னை தவறான முறையில் தொட்டு பேசுகிறார் என்று புகார் செய்துள்ளார்.

இந்த புகாரை குழந்தைகள், அமைப்பு முழு, சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளது. சிபிசிஐடியினர் இதுகுறித்து மேற்கொண்ட போது, இந்த சிறுவன் வேலைக்கார பெண்ணிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்சி செய்ததாகவும் இதனால் இவன் மீது போலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என்றும் சுமதியின் தரப்பினர் தெரிவித்துள்ளது.

இப்படியே மாறி மாறி இரு தரப்பினர் புகார் அளித்திருப்பதால், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளார்.