கோவை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியை பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவர் தன் கணவர் விஜயராஜை பிரிந்து கடந்த ஒரு வருடமாக தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாத்த்திற்கு முன்பு கோவையை அடுத்த அரிசிபாளையம் மேற்கு தோட்டம் என்ற பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார் ரேவதி.

இதைதொடர்ந்து இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் இன்று காலை வீட்டை உள்ளிருந்து திறக்க முற்பட்டனர். ஆனால் வீட்டின் கதவு வெளியே பூட்டு போட்டிருப்பதை அறிந்த அவர்கள் தெரிந்தவர்களுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து வீட்டை திறந்தனர்.

இதையடுத்து ரேவதியின் வீட்டை பார்க்கும்போது அங்கு அவர் கழுத்து அறுபட்டு கொலைசெய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

அக்கம்பக்கம் வீடுகளை வெளியே பூட்டிவிட்டு நடைபெற்றுள்ள இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.