கோயம்பேட்டில்  அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் போலீசார் தன்னை கோயம்பேடு போலீசார் தன்னை துன்புறுத்தியதாக பெங்களூர் ஆராய்ச்சி மாணவி கதறி அழுதார். இதை பார்த்து அரண்டு போன அமைச்சர் பாதியில் பிரஸ்மீட்டை முடித்து கொண்டு ஓட்டம் எடுத்தார்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் தமிழகத்திலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் புழங்கும் இடமாகும். பொங்கல் பண்டிகையை ஒட்டி கூடுதல் பஸ்கள் விடுவது , பயணிகள் பாதுகாப்பு குறித்து போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேட்டிகொடுத்துகொண்டிருக்கும் போது இளம்பெண் ஒருவர் திடீரென கூட்டத்தில் புகுந்து தன்னிடம் போலீசார் தரக்குறைவாக நடந்துகொண்டதாக கதறினார். இதனால் பிரஸ் மீட்டில் சலசலப்பு ஏற்பட்டது . அமைச்சர் அதிர்ந்து போய் பதில் சொல்லாமல் பிரஸ்மீட்டை பாதியில் நிறுத்திவிட்டு எழுந்து நடந்தார். 

அந்த பெண்ணை அழைத்து என்ன நடந்தது என்று கூட விசாரிக்காமல் அமைச்சர் செல்வதை பார்த்து செய்தியாளர்கள் துரத்தி சென்றனர். சார் இது போன்ற சம்ப்பவம் நடக்கிறதே என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டபோது பதில் சொல்லாமல் நடந்துள்ளார். 

கூச்சலிட்ட பெண்ணையும் போலீசார் அப்புறப்ப்டுத்த முயன்றுள்ளனர். இதையும் செய்தியாளர்கள் படமெடுக்க முயற்சிக்கவே வேறு வழியில்லாமல் போலீஸ் இன்ஸ் பெக்டரை வரச்சொல்லுங்கள் என்று சொன்ன அமைச்சர் , செய்தியாளர்களிடம் இது போன்று நடப்பதை வேடிக்கை பார்க்க மாட்டோம். குற்றச்சாட்டு பற்றி புகார் வாங்க சொல்கிறேன் விசாரித்து உண்மை என்றால் நடவடிக்கை எடுக்க சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார்.

பெங்களூரில் ஆராய்ச்சி படிப்பு படித்துவரும் மாணவி அன்னபூர்னா இன்று காலை சென்னை வந்துள்ளார். பேருந்தில் வந்ததால் ஏற்பட்ட மயக்கம் வாந்தி காரணமாக மயக்க நிலையில் இருந்த அவர் அங்கு கீழே படுத்து ஓய்வெடுத்துள்ளார்.

அப்போது வந்த ஒரு போலீஸ்காரர் மற்றும் ஆயுதப்படை காவலர் அவரை எழுப்பியுள்ளனர். தக்கு வீடு அரும்பாக்கம் தான் வாந்தி எடுத்ததால் உடல் சோர்வு பத்து நிமிடத்தில் கிளம்பி விடுவேன் என்று கூறியதற்கு தன்னை இழிவாக திட்டி பிடித்து பிராத்தல் கேஸ் போட்டுவிடுவேன் என்று அடிக்க கையை ஓங்கி வெளியே துரத்தியதாக் மாணவி அன்னபூர்ணா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.