- Home
- Tamil Nadu News
- போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை.. பொங்கலுக்கு 5 நாள் லீவு.. மாணவர்கள் குஷியோ குஷி!
போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை.. பொங்கலுக்கு 5 நாள் லீவு.. மாணவர்கள் குஷியோ குஷி!
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான போகி பண்டிகை அன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு பொங்கலுக்கு 5 நாள் லீவு கிடைத்துள்ளது.

பொங்கல் பண்டிகை விடுமுறை
தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை அரசு மற்றும் தனியார் என அனைத்து வகையிலான பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பொங்கலுக்கு 5 நாள் பள்ளிகளுக்கு விடுமுறை
அதாவது பொங்கல் பண்டிகைக்கும் முந்தைய நாளான போகி பண்டிகை (ஜனவரி 14) அன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை என 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்துள்ளதால் மாணவர்கள் குஷியடைந்துள்ளனர்.
பொங்கலுக்கு பிறகும் 3 நாட்கள் விடுமுறை
பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குடியரசு தினத்தையொட்டியும் பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதாவது ஜனவரி 26ம் தேதி (திங்கட்கிழமை) குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.
இதற்கு முன்பாக சனிக்கிழமை (ஜனவரி 24), ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) லீவு என்பதால் குடியரசு தினத்தையும் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இது பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி மாதத்தில் மட்டும் இனிமேல் பொங்கல் பண்டிகை விடுமுறை, குடியரசு தின விடுமுறை ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக 10 நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

