ஆளுநரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்? ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே  கரிவலம்வந்தநல்லூரில் வசித்து வரும் ஒடிசாவை சேர்ந்தவர் அஜய் குமார் மாண்டல். இவரது மனைவி ஸ்ரீ  தனாமாஞ்சி (22). திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.  

Woman commits suicide after losing money in online rummy

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வடமாநிலத்தை சேர்ந்த பெண் சங்கரன்கோவிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே  கரிவலம்வந்தநல்லூரில் வசித்து வரும் ஒடிசாவை சேர்ந்தவர் அஜய் குமார் மாண்டல். இவரது மனைவி ஸ்ரீ  தனாமாஞ்சி (22). திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.  இவர்கள் அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளனர். அஜய் குமார் மாண்டல் தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்ற அஜய் மாலையில் வீடு திரும்பியுள்ளார். 

இதையும் படிங்க;- தமிழகத்தின் மிகப்பெரிய சாபக்கேடான ஆன்லைன் ரம்மிக்கு ஆப்பு! மகிழ்ச்சியில் ராமதாஸ்! கையோடு முதல்வருக்கு கோரிக்கை

Woman commits suicide after losing money in online rummy

அப்போது, மனைவி ஸ்ரீ தனாமாஞ்சி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக தொங்கிய நிலையில் இருந்ததார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தியதில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி ரூ.70 ஆயிரம் இழந்ததால் மன வேதனையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

Woman commits suicide after losing money in online rummy

ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தும் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் நேற்றுடன் அந்த சட்டம் காலாவதி ஆகிவிட்டது. தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே காரணம் என அன்புமணி கூறிவந்த நிலையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வடமாநில பெண் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;-  இங்கே பாருங்க.. தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் ஆளுநரே பொறுப்பு.. பொங்கும் அன்புமணி ராமதாஸ்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios