Asianet News TamilAsianet News Tamil

இங்கே பாருங்க.. தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் ஆளுநரே பொறுப்பு.. பொங்கும் அன்புமணி ராமதாஸ்..!

நீர் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற எந்த வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் வருகிற 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம்.

Even if a life is lost in Tamil Nadu, the Governor is responsible... Anbumani ramadoss
Author
First Published Nov 28, 2022, 7:31 AM IST

கடந்த அக்டோபர் மாதம் 17ம் தேதி சட்டப்பேரவையில் தமிழகத்தில் ஆன்லைன் தடை சட்ட மசோதா இயற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறார் என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாமக மூத்த நிர்வாகிகளை சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நாகை மாவட்டத்தில் நடைபெற்ற பாமக கூட்டத்தில் பேசிய அன்புமணி;- சீர்காழி, மயிலாடுதுறை பகுதியில் ஒரே நாளில் வரலாறு காணாத வகையில் மழை பெய்ததால் அப்பகுதி விவசாயிகள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர். பயிர் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், பயிர் காப்பீடு மூலம் ஏக்கருக்கு ரூ.35 ஆயிரமும் வழங்க வேண்டும். அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,000 என்ற நிவாரணத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படிங்க;- ஆளுநர் Vs தமிழ்நாடு அரசு.. சண்டை போடாதீங்க.! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சொன்ன ஐடியா !

Even if a life is lost in Tamil Nadu, the Governor is responsible... Anbumani ramadoss

ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றாததை கண்டித்து நாகை, திருவாரூர் மாவட்டங்களில்  இன்று நடைபெறும் போராட்டத்திற்கு பாமக முழு ஆதரவு அளிக்கும் என்றார். நீர் தேர்வு ரத்து, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற எந்த வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் வருகிற 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம். அதற்கு முன்னோட்டமாக வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் வியூகங்கள் அமைக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க;-  இது மன்னிக்க முடியாத துரோகம்.. இனியும் என்.எல்.சி நிறுவனம் அங்கு செயல்படத் தேவையில்லை.. அன்புமணி..

Even if a life is lost in Tamil Nadu, the Governor is responsible... Anbumani ramadoss

ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தும் தமிழக ஆளுநர் அலட்சியம் காட்டுவது நியாயமானது அல்ல. தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களில் 32 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே காரணம். முதல்வர், ஆளுநர் ஒருமித்த கருத்தோடு செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என 
அன்புமணி கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  கஞ்சா போதையில் தலைமை ஆசிரியரின் மண்டை உடைப்பு.. எங்கே போகிறது மாணவர் சமுதாயம்.. கதறும் அன்புமணி.!

Follow Us:
Download App:
  • android
  • ios