Asianet News TamilAsianet News Tamil

ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்… ராமநாதபுரத்தில் பரபரப்பு!!

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு வளர்மதி என்ற பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

woman attempts self immolation infront of ramanathapuram collector office
Author
Ramanathapuram, First Published May 18, 2022, 3:16 PM IST

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு வளர்மதி என்ற பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வளர்மதி என்ற பெண் தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் கேட்கப்பட்டது. அப்போது வளர்மதி கூறுகையில், எனது கிராமத்தில் உள்ள தேவதாஸ் என்பவரின் குடும்பத்தினர், என்னையும், எனது குடும்பத்தினரையும் கிறிஸ்தவ மதத்துக்கு மாற வற்புறுத்துகின்றனர். நாங்கள் மதம் மாற மறுத்த நிலையில் என்னையும் எனது குடும்பத்தினரையும் அவர்கள் சித்திரவதை செய்கின்றனர். இதுப்பற்றி பொலிஸாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அதன் விளைவாக தான் தீக்குளிக்க முயன்றேன்.

woman attempts self immolation infront of ramanathapuram collector office

எனது கிராமத்தில் மத மாற்றம் நடக்கிறது. நான் மதம் மாற மறுத்ததால், தேவதாஸ் என்பவரின் குடும்பத்தினர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் என்னையும் எனது குடும்பத்தினரையும் துன்புறுத்தி வருகின்றனர். எனது வீட்டிற்கு செல்லும் வழியில் தேவதாஸின் குடும்பத்தினர் மறித்து என் மீது பொய் வழக்குகள் போட்டுள்ளனர். நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. பின்னர் என்னை டாடா ஏஸ் வாகனத்தை ஏற்றி கொல்ல முயன்றனர். அதனால், போலீசை அணுகினேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது மகன் கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) எட்டு நபர்களால் தாக்கப்பட்டார்.

woman attempts self immolation infront of ramanathapuram collector office

அங்கிருந்த பொதுமக்களால் அவர் காப்பாற்றப்பட்டார். என் கிராமத்தில் தேவதாஸ் குடும்பம் தான் எங்களுக்கு தீங்கு விளைவிக்கிறது என்று தெரிவித்தார். இதுக்குறித்து, ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு (எஸ்பி) அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், வருவாய் பிரிவு அதிகாரி (ஆர்டிஓ) மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) ஆகியோர் நடத்திய விசாரணையில், நிலத்தகராறு தான் பிரச்சனைக்கு அடிப்படையாக உள்ளது என்று மற்றபடி அதே கிராமத்தில் ஏராளமான இந்து குடும்பங்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், வளர்மதிக்கும், தேவதாஸ் குடும்பத்துக்கும் நிலம் தொடர்பாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக தகராறு இருந்ததாகவும், நிலத்தகராறு தொடர்பான புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

Follow Us:
Download App:
  • android
  • ios