Within 24 hours there will be rain in tamilnadu - Weather Research Center Information
வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போன நிலையில் தற்போதைய ஆண்டு முன்கூட்டியே பெய்த கன மழையால் தமிழகத்திலும் பருவ நிலை மாறியுள்ளது.
வெப்ப சலனம் காரணமாக பல்வேறு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. தற்போதும் நெல்லை, மற்றும் கன்னியாக்குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அதைனை சுற்றியுள்ள ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்எனவும், மாலை அல்லது இரவு நேரத்தில் நகரில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்ஆகவும், குறைந்தபட்சமாக வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மழையின் அளவு நீலகிரி மாவட்டத்தில் 5 செ.மீ மழையும், நடுவட்டத்தில் 4 செ.மீ மழையும்,வால்பாறையில், 3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
