வங்கக்கடலில் நிலை கொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடல் அலை உயரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை கடலோர பகுதியில் சுமார் 8 மீ அளவிற்கு கடல் அலை உயரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதாவது வங்கக் கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதனை தொடர்ந்து இன்று புயலாக மாற உள்ளது என்றும், இதனால் கடலில் அலை கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, நாளை விடியற்காலை 2.30 முதல் 11.30 மணி வரையில் இரண்டரை மீட்டர் அளவில் கடல் கொந்தளிப்பு காணப்படும். 

அதிகபட்சமாக 8 மீ வரை கூட கடல் அலை உயரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தவிர ஏற்கனவே கஜா புயல் பாதித்த பகுதிகளான கடலூர், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு கடல் பகுதிகளில் 5.8 மீ அளவில் அலைகள் எழும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், வட தமிழக பகுதிகளில் 65 கிமீ வேகத்தில் கடற்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.