Foxconn : தமிழகத்திற்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் வருமா? வராதா? கிளம்பிய சர்ச்சை - தமிழக அரசு என்ன சொல்கிறது?
தைவானை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஃபாக்ஸ்கான் இன்டஸ்ட்ரியல் இன்டர்நெட் துணை நிறுவனமானது, தென் மாநிலத்தில் மின்னணு உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையைத் திறப்பதற்கு தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் புது சர்ச்சை உருவாகி உள்ளது.
ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் இண்டஸ்ரியல் இண்டெர்நெட் நிறுவனம் புதிய ஆலையை அமைக்கிறது. புதிய ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசும், ஃபாக்ஸ்கான் நிறுவனமும் கையெழுத்திட்டன. ஃபாக்ஸ்கானின் புதிய ஆலை மூலம் மொபைல் போன் உதிரி பாகங்கள் தயார் செய்யப்பட உள்ளன.
இந்த புதிய நிறுவனம் மூலம் 6,000 பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆலை 2024ம் ஆண்டுக்குள் தயாராகும் என கூறப்படுகிறது. அதைதொடர்ந்து அங்கு கூடுதல் முதலீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ஆலை காஞ்சிபுரத்தில் அமைய உள்ளதாக ஃபாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே சென்னையில் ஆப்பிள் நிறுவனத்திற்கான ஐபோன் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் 35,000 பேர் வேலை பார்க்கின்றனர். அதேநேரம் புதிய ஆலையில் எந்த நிறுவனத்தின் செல்போன்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெறும் என்பது தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
அதேபோல புதிய இந்திய ஆலை ஐபோன்களுக்கான உதிரிபாகங்களை உருவாக்குமா அல்லது மற்ற நிறுவனங்களுக்காக அல்லது இரண்டும் தயாரிக்குமா என்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக வெளியான தகவலை பாக்ஸ்கான் நிறுவனம் மறுத்துள்ளதாக சீன நாளிதழ் தெரிவித்திருந்தது.
500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!
இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோர் டிவிட்டரில் பாக்ஸ்கான் கிளை நிறுவனமான Hon Hai Technology Group முதலீட்டை உறுதி செய்யும் வகையில் பதிவிட்டு உள்ளனர். இதன் மூலம் Hon Hai Technology நிறுவனம் தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்கிறது. இதை நேற்றைய பதவிலேயே தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா குறிப்பிட்டு இருந்தார்.
சீனாவின் செக்யூரிட்டீஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு FII "நாங்கள் எந்த முதலீட்டு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த முதலீட்டுக்கும் FII நிறுவனத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பது சரி தான், காரணம் முதலீடு செய்வது Hon Hai Technology நிறுவனம் ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் 1600 கோடி ரூபாய் முதலீட்டில் உதிரிபாகங்கள் தொழிற்சாலை அமைப்பதும் உறுதி, 6000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதும் உறுதி என்று தெரிய வந்துள்ளது.
2024க்கு கட்டையை போட்ட இபிஎஸ்.. அண்ணாமலை நடைப்பயணத்தில் முதல் நாளே இப்படியா.? அப்செட்டில் பாஜக