தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமாப மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,

09.06.2022. 10.06.2022, 11.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

12.06.2022. 13.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

 சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

09.06.2022: மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

10.06.2022: மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளிலும்‌, கர்நாடக கடலோரப்பகுதி பகுதிகளிலும்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

11.06.2022. 12.06.2022, 13.06.2022: மத்துய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளிலும்‌, வட கேரளா - கர்நாடக கடலோரப்பகுதி மற்றும்‌ இலட்சத்தீவு பகுதகளிலும்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுஇகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடரும்.. அறிவிப்பை திரும்ப பெற்ற அமைச்சர்..