Wifi is free now then what enjoy

கும்பகோணம் ரயில் நிலையத்தில் நேற்று முதல் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு தினமும் 38 ரயில்கள் வந்து செல்கின்றன. தினமும் 5000 பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். கோவில் நகரமாகவும் முக்கிய வணிக மையமாகவும் விளங்கும் கும்பகோணத்திற்கு சுற்றுலாப் பயணிகள், வர்த்தகர்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

அதிக டிக்கெட் வருவாய் உள்ள “ஏ” கிரேடு ரயில் நிலையங்களுக்கு இலவச வைஃபை வசதி ஏற்படுத்தித் தரப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில், அதிக வருவாய் ஈட்டும் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.