பொங்கல் கொண்டாட அரசு வழங்கிய 1000 ரூபாயை ஆசையாய் வாங்கிய மனைவி..! பணத்தை தர மறுத்ததால் போட்டுத்தள்ளிய கணவர்..! 

மதுரை மாவட்டத்தில் வசித்துவரும் உசிலம்பட்டியை சேர்ந்த தம்பதிகள் ராமர் மற்றும் ராஜாத்தி. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் மூன்று பேருக்கும் திருமணம் நடந்து முடிந்து விட்டது. 

தற்போது இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். ஆனால் எந்தவொரு வேலைக்கும் வெளியில் செல்வதில்லை. அதேவேளையில் தனக்கு வேண்டிய பணத்தை தினமும் தருமாறு மனைவி ராஜாத்தியை  கொடுமை படுத்த கூடிய நபராக இருந்துள்ளார்.இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசான ரூபாய் ஆயிரத்தை பெற்றுக்கொண்ட ராஜாதியிடம், அந்த ஆயிரம் ரூபாய் எனக்கு வேண்டும் என கேட்டுள்ளார் ராமர். இதற்கு தர மறுத்த ராஜாதிக்கும்,ராமருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அதிக ஆத்திரமடைந்த ராமர் மனைவி என்று கூட பார்க்காமல் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியை ஒரே வெட்டு வெட்டி உள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்த ராஜாத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக  ராமரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.