கணவனின் கொடுமை தாங்க முடியாமல் அழுதுக்கொண்டே ஒரு பெண் வீடியோ  வெளியிட்டு உள்ளார்.

வேலூர்  மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள  ஜெயந்தி புரம் கிராமத்தில் வசிக்கும் இந்த பெண்,தன்னுடைய கணவன் எப்போதும் அடித்து உதைத்து துன்புறுத்துவதாகவும்,பெற்ற பிள்ளைகளை கூட தினமும்  அடிபதாகவும், கதறி அழுதுள்ளார்.

இது தொடர்பாக,காவல் நிலையத்தில் பல முறை புகார் அளித்தும் அவர்கள் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி விடுவதாகவும்,தனக்கு பெற்றோர்கள் யாரும் இல்லை என்றும், கணவரை நம்பி தான் அவருடன் வந்ததாகவும் தெரிவித்து உள்ளார்...

எனவே தற்போது உதவி கரம் நீட்ட யாரும் இல்லாததால்,கணவரிடமிருந்து தன்னையும் குழந்தைகளையும் மீட்க யாரவது வந்து உதவி செய்யுங்கள் என அழுதுக்கொண்டே  பேசுகிறார்...

உணவு கூட உண்ண விடாமல் தொடர்ந்து அடிப்பதாகவும் தெரிவித்து,வீடியோ மூலம்  பதிவு செய்துள்ளார் இந்த பெண்மணி...