மனைவியும், கள்ளக்காதலனும் தலைமறைவானதால் கோபத்தில் இருந்த கணவன் கள்ளக் காதலனின் மனைவியை துண்டுத் துண்டாக வெட்டப் பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் செல்லியம்மன் நகரில் பெண்ணின் கைகளை துண்டித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் செல்லியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஷேக். டெய்லர். இவரது மனைவி ஷகிலா. தம்பதிக்கு ஒரு மகன், மகள். இதே பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சத்யா. சத்யாவிற்கும் ஷேக் வைத்திருக்கும் டைலர் கடையில் ஜாக்கெட் தைக்க கொடுக்க வரும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியிருக்கிறது.

இந்நிலையில் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விஷயம் அறிந்த சத்யாவின் கணவன் ஷங்கர் ஷேக்கை கடுமையாக எச்சரித்துள்ளார்,. பலமுறை கள்ளக் காதலை கைவிடும் படி கெஞ்சியிருக்கிறார்.

ஷிகலா கடந்த சில வாரங்களாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, தனது தாய் வீட்டில் இருந்த சில பொருட்களை எடுத்து வருவதற்காக ஷகிலா செல்லியம்மன் நகருக்கு வந்துள்ளார். அப்போது, சங்கர் குடிபோதையில் வந்து ஷகிலாவிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். 

பின்னர் ஆத்திரம் அடைந்த சங்கர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஷகிலாவின் கைகளிலும் கழுத்திலும் சரமாரியாக வெட்டியுள்ளார். 
இதில், ஷகிலாவின் 2 கைகளின் மணிக்கட்டு பகுதிகளும் துண்டானது. ரத்த வெள்ளத்தில் ஷகிலா துடித்தார். தகவலறிந்து வந்த ஆரம்பாக்கம் போலீசார் உயிருக்கு போராடிய ஷகிலாவை மீட்டு, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சோழவரத்தில் பதுங்கி இருந்த சங்கரை நேற்று மாலை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சங்கர் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் கூறியதாவது: 

சத்யாவுக்கும், ஷேக்குக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக சங்கர் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் சத்யாவை கொடுமைப்படுத்தி அவருடைய தாய் வீட்டுக்கு விரட்டி விட்டுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக ஷேக்கிடமும், சங்கர் வாக்குவாதம் செய்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஷேக் மற்றும் சத்யா திடீரென தலைமறைவாகிவிட்டனர். இதனால் ஷேக்கின் மனைவி ஷகிலா ஆரம்பாக்கம், ஜீவா நகரில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் மாலை, தனது வீட்டில் இருந்து சில பொருட்களை எடுத்து வருவதற்காக ஷகிலா செல்லியம்மன் நகருக்கு வந்துள்ளார். 

அப்போது, சங்கர் ஷகிலாவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக வெட்டி உள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.