ஸ்ரீ தேவிக்காக தனி விமானம்...அம்பானி முக்கியத்துவம் கொடுக்க காரணம் இதுதானம்...

நடிகை ஸ்ரீ தேவி கடந்த சனிகிழமையன்று துபாயில் மரணம் அடைந்தார்.அவரது மரணத்தை கேட்டறிந்த அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் ஸ்ரீ தேவை உடலை இந்தியா கொண்டு வருவதில் வேகம் காட்டிய வேளையில்,ஞாயிற்றுக்கிழமை காலை அம்பானி நிறுவனத்திற்கு சொந்தமான தனி விமானம் துபாய் சென்று அடைந்தது.

பின்னர் உடலை,துபாய் கொண்டு வர இரண்டு நாட்கள் கால தாமதமானது.இருந்தபோதிலும்,மும்பையிலிருந்து துபாய் வரை உடலை கொண்டுவருதில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பொறுப்புடன் நடந்துகொண்டார்  அம்பானி

காரணம் என்ன தெரியுமா...?

நடிகை ஸ்ரீதேவி தனது நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்றார். மோஹித் மர்வா தொழில் அதிபர் அனில் அம்பானி மனைவியின் அக்கா மகள் அந்தாரா மோதிவாலாவை திருமணம் செய்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

ஒரு பக்கம் நட்பு ரீதியாகவும்,மற்றொரு பக்கம் சொந்தம் ரீதியாகவும் அனில் அம்பானி  தன்னுடைய  கடமையை செய்ய  தனி விமானம் அனுப்பி இருந்துள்ளார்.

இந்த விமானத்தில்,13 பேர் அமர கூடும்.மேலும் ஸ்ரீ தேவி உடல் மும்பை விமான  நிலையம் வந்தடைந்தவுடன்,அங்கிருந்து வீடு வரை உடலின் முன் தனி கார் மூலம்  அம்பானி தான் முதல் ஆளாக வந்து  நின்று உள்ளார்.

இறப்பு முதல் தகனம் வரை அம்பானி பெரும் பங்கு ஆற்றி உள்ளார் என்று ஸ்ரீ தேவியின் ரசிகர்கள்  நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.