Who has come to escape when police attempted to arrest the flow of fake medicine

ஆற்காடு அருகே போலி மருத்துவம் செய்து வந்த ஒருவரை போலீசார் பிடிக்க சென்ற போது அவர் தப்பி சென்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ஆற்காடு அடுத்த தாமரைபாக்கத்தில் பாஷா என்பவர் மருத்துவம் பார்த்து வந்தார். இவரது சிகிச்சை முறைகளில் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து போலீசார் மருத்துவ அதிகாரிகளின் உதவியோடு பாஷாவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாஷா 8 வகுப்பு மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.

இதையறிந்த போலீசார் பாஷாவை கைது செய்ய முயன்றனர். ஆனால் பாஷா அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாஷாவை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.