Asianet News TamilAsianet News Tamil

மிக்ஜம் புயல் வெள்ள நிவாரண நிதி: வாரி வழங்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள... யார் எவ்வளவு கொடுத்தாங்க தெரியுமா?

மக்களுக்கு நிவாரணம் வழங்க கார்ப்பரேட் நிறுவனங்களும் நன்கொடை அளிக்க முன்வந்துள்ளன. பல நிறுவனங்கள் தாமாக முன்வந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை செலுத்தியுள்ளனர்.

Which corporate company contributed the most to Tamil Nadu Flood relief fund sgb
Author
First Published Dec 12, 2023, 8:38 PM IST | Last Updated Dec 12, 2023, 8:54 PM IST

மிக்ஜம் புயல் மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க தமிழக அரசுக்கு பல தரப்பிலும் இருந்து உதவிகள் குவிந்து வருகின்றன. பல கார்ப்பரேட் நிறுவனங்களும் தாராளமாக நன்கொடை வழங்கி வருகின்றன.

வெள்ளத்தில் மிதந்தை சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. தமிழக அரசு நிவாரண தொகையாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரேஷ் கடைகள் மூலம் ரூ.6,000 வழங்குவதாக அறிவித்துள்ளது. ஒரு வாரத்திற்குள் நிவாரண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்க கார்ப்பரேட் நிறுவனங்களும் நன்கொடை அளிக்க முன்வந்துள்ளன. பல நிறுவனங்கள் தாமாக முன்வந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை செலுத்தியுள்ளனர். இதுவரை தனியார் நிறுவனங்களிடம் இருந்து பலகோடி ரூபாய் தமிழக அரசுக்குக் கிடைத்துள்ளது.

ஹை ஸ்பீடு இன்டர்நெட் வழங்க கூகுள் தாராவுடன் கைகோர்க்கும் ஏர்டெல்! ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஆப்பு தான்!

Which corporate company contributed the most to Tamil Nadu Flood relief fund sgb

சன் குழுமம் ரூ.5 கோடி, அசோக் லேலாண்ட்  நிறுவனம் ரூ.3 கோடி, வி.ஐ.டி. பல்கலைக்கழகம் ரூ.1.25 கோடி வழங்கியிருக்கின்றன. போத்தீஸ், லீப் கிரீன் எனர்ஜி, சன் மார் குழுமம், சக்தி மசாலா ஆகிய நிறுவனங்கள் தலா ரூ.1 கோடி நன்கொடை அளித்துள்ளன. லயன் டேட்ஸ் நிறுவனம், ரூ. 50 லட்சம் கொடுத்திருக்கிறது.

கட்சிகள் சார்பிலும் அரசுக்கு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. மதிமுக சார்பில் ரூ.10.2 லட்சமும், விசிக சார்பில் ரூ.10 லட்சமும் கொடுக்கப்பட்டுள்ளன. திராவிடர் கழகம் ரூ.10 லட்சம் அளித்துள்ளது. தமிழ்நாடு கடல்சார் வாரியம் ரூ.2 கோடி கொடுத்துள்ளது. புதுச்சேரி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து ரூ.11 லட்சம் நிதியை நிவாரண உதவிகளுக்காக வழங்கியிருக்கிறார்கள்.

இது தவிர நடிகர் சிவகார்த்தியேன் நிவாரண நிதிக்கான காசோலையை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார். இன்னும் பல நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் முதல்வரைச் சந்தித்து நிவாரண நிதி வழங்க நேரம் கேட்டுள்ளனர்.

சபரிமலையில் தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு; தமிழக பக்தர்கள் போராட்டம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios