தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்? வானிலை மையம் தகவல்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழலில் தமிழ்நாட்டில் இன்று மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Where will it rain in Tamil Nadu today? Here is the weather forecast by meteorological department

தமிழ்நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீலகிரியில், கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 8ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக வலுபெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்நிலையில், இன்று அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே சமயம் வெப்பநிலை இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து துறைகளில் தமிழ்நாடு முன்னேறியது எப்படி?

Where will it rain in Tamil Nadu today? Here is the weather forecast by meteorological department

இன்று (மே 7ஆம் தேதி) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நாளை (மே 8ஆம் தேதி) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்துவரை அடுத்த 24 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கலாம். குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

மே 10ஆம் தேதி வரை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசம் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று நீட் தேர்வு: தமிழகத்தில் இருந்து 1.5 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios