whatsapp and Facebook Pages to Hear defects of Entrepreneurs - collector Notice ...

திருப்பூர்

தொழில் முனைவோர்களின் கருத்துக்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்து திட்டங்கள் மாற்றியமைக்கவும் மேம்படுத்தவும் சமூக வலைதளங்களில் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "தமிழகத்தில் தொழில் தொடங்கவரும் தொழில் முனைவோருக்கு தேவையான தொழில் உரிமங்கள் மற்றும் அனுமதிகளை விரைவாக பெற்றுத் தருவதற்காக திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒருமுனை தீர்வு குழு மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

தொழில்துறை மூலம் ஒருங்கிணைந்த இணையதள வழி ஒற்றைச்சாளர தகவு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தகவினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

மேலும், சுகாதார துறையிடம் இருந்து பெற வேண்டிய தடையில்லா சான்றிதழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையினரிடமிருந்து பெற வேண்டிய உரிமம் மற்றும் மின்வாரியத்திடம் இருந்து பெற வேண்டிய குறைந்த அழுத்த மின் இணைப்பு ஆகியவற்றுக்கான சேவைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றை சாளர தகவு (http://easy-bus-i-ness.tn.gov.in/msme) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தொழில்முனைவோர், துறைகளிடம் இருந்து பெற வேண்டிய உரிமங்கள், தடையில்லா சான்றுகள், ஒப்புதல்கள் போன்றவற்றை அந்தந்த அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்காக செயல்படுத்தி வரும், படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் ஆகிய இரு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தங்களது விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை இணையதளத்தின் மூலமாக பதிவேற்றம் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக www.msm-e-o-n-l-i-ne.tn.gov.iun/uye-gp மற்றும் (www.msm-e-o-n-l-i-ne.tn.gov/in/ne-eds) தகவு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

தொழில் வணிக துறையின் திட்டங்கள் குறித்து தொழில் முனைவோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிதாக சமூக ஊடக வலைதள பக்கங்களான முகநூல், டிவிட்டர் மற்றும் யூடியூப் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் தொழில் முனைவோர்களின் கருத்துக்கள் மற்றும் குறைகளை கேட்டறிந்து திட்டங்கள் மாற்றியமைக்கவும் மேம்படுத்தவும் முடியும். எனவே பயனாளிகள் அனைவரும் மேற்கூறிய திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.