குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி நிராகரிப்பா.? நடந்தது என்ன.? வெளியான தகவல்

2025 குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.

What is the reason why Tamil Nadu decorated floats are not participating in the Republic Day parade KAK

குடியரசு தின விழா

குடியரசு தின விழா ஆண்டு தோறும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவர் கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுவார். முப்படைகளின் அணிவகுப்பு, ஒவ்வொரு மாநிலங்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். அதன் படி கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது. இதனையடுத்து மத்திய அரசால் மறுப்பு தெரிவிக்கப்பட்ட அலங்கார ஊர்தியை தமிழகம் முழுவதும் ஊர்வலமாக தமிழக அரசு அனுப்பியது.

இந்தநிலையில் கடந்த ஆண்டு தமிழக அரசின் அலங்கார ஊர்தி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றது. இதனிடையே வருகிற 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின அணி வகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லையென தகவல் வெளியானது. குஜராத், கோவா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 

What is the reason why Tamil Nadu decorated floats are not participating in the Republic Day parade KAK

தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு

எனவே தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், குடியரசு தின விழாவில்,  தலைநகர் டில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அதிமுக ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு, 

ஆனால் விடியா திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன், முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும் , அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள் என தெரிவித்துக்கொள்வதாக அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

What is the reason why Tamil Nadu decorated floats are not participating in the Republic Day parade KAK

உண்மை சரிபார்ப்பு குழு தகவல்

இதனிடையே தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்டுள்ள தகவலில் குடியரசு தினம்  தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்று வதந்தி என தெரிவித்துள்ளது. 2025ம் ஆண்டு குடியரசு தின விழாவில், தலைநகர் டில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டதாகப்  பரப்பப்படுகிறது.  இது முற்றிலும் தவறான தகவல். 2025ம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது.  டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும்.

ஆனால், சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது. 2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி அடுத்த 2026 ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும். ஆனால், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகிறது. வதந்தியைப் பரப்பாதீர்! என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios