ஏர்செல் செல்போன் நிறுவன சேவை கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது ஏன் என்ற காரணம் தற்போது வெளியாகியுள்ளது. ஏர்செல் செல்போன் நிறுவன சேவை கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். கோவையிலுள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர், அதே போல இன்றும் மேற்கு தாம்பரத்திலுள்ள ஏர்செல் அலுவலகத்தின் முன்பு வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர் அப்போது பூட்டபட்டிருந்த அலுவலகத்தை கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும், பல இடங்களில், ஏர்செல் சேவை மொத்தமாக முடங்கியது.

ஆமாம்... எர்செல்லுக்கு என்னதான் பிரச்சனை? வாடிக்கையாளர்களிடம் முன்கூட்டியே சொன்னார்களா?, தென் மாநில தலைவர் சங்கரநாராயணன் கூறியது, நாங்கள், குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்தின், தொலைத்தொடர்பு கோபுரங்களை பயன்படுத்துகிறோம். இரு தரப்புக்கு இடையே நிதி தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் திடீரென செல்போன் டவர்களை மூடிவிட்டதால்தான் இந்த சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த சேவை முடங்கவிருப்பதை தெரிந்த்கொண்ட வாடிக்கையாளர்கள் பீதி காரணமாக வேறு நெட்வொர்க்க்கிற்கு மாறும் வசதியை, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் மாற முயற்சித்ததால், சர்வர் தாக்குப்பிடிக்க முடியாமல் செயலிழந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.கடந்த 2016 ஜூலை மாதத்தில் ரூ.120 கோடி லாபத்தோடு இயங்கிய ஏர்செல் நிறுவனம், கடந்த 2017 ஜூலை மாதத்தில், அதாவது ஒரே வருடத்தில், ரூ.5 கோடி மட்டுமே லாபம் ஈட்டும் நிறுவனமாக பெரும் சரிவை சந்தித்தது. ஏர்செல் நிறுவனம் சந்தித்த மோசமான காலகட்டம் இதுதான். இதனையடுத்து அதிவிரைவாக ஏர்செல் நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக சரிவை சந்தித்தது. டிசம்பரில், 120 கோடி நஷ்டம் என்று அறிவித்து. அதேபோல, ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்க்கிற்கு மாற, ஏர்செல் பயனாளர்களுக்கு MNP கோட் நம்பர் தரப்பட்டுள்ளது. இந்த எண்ணைப் பெறுவதற்கு, PORT என டைப் செய்து, அத்துடன் உங்கள் மொபைல் எண்ணையும் சேர்த்து டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு அனுப்பலாம்.  அந்த எண்ணை அருகில் உள்ள மொபைல் கடைகளில் உங்கள் ஆதார் அட்டையுடன் சென்று கொடுத்து, நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளலாம். இந்த சேவைக்கு எவ்வித கட்டணமும் இல்லையாம். 

அதே போல, ஏர்செல் நிறுவனம் தனது  செயல்பாட்டை இழந்த பிறகு, அதனைப்பயன்படுத்தி வந்தவர்கள், வேறு நெட்வொர்க்குக்கு மாற ஏர்டெல்  நிறுவனம் வாய்பளித்துள்ளது. உங்களுடைய செல்போனில், நெட்வொர்க் செட்டிங் அல்லது ஆபரேட்டர் செலகஷன் பகுதிக்கு போய் , அதில்  மேனுயல்(manual) சர்ச் கொடுத்து,  அதில்  ஏர்டெல் நெட்வொர்க்கைத் தேர்வு செய்யவும். இதன் மூலம் ஏர்டெல் நெட்வொர்க் வழியாக உங்கள் ஏர்செல் நம்பரை வேறு நெட்வொர்க்குக்கு மாற்றலாம் என அறிவித்துள்ளனர்.