What did you see the day without shadow Namakkal students have watched

நாமக்கல்

“நிழலே இல்லாத நாள்” நிகழ்வை நாமக்கல் பள்ளி மாணவ, மாணவிகள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

சூரியன் உச்சிக்குச் செல்ல, செல்ல ஒரு பொருளின் நிழல் சிறியதாகிக் கொண்டே போகும். இது அனைவரும் அறிந்த ஒன்றே.

சூரியன் நம் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் சுழியமாகி விடும். அதாவது, நிழல் காலுக்கு கீழே இருக்கும்.

ஆனால், சூரியன் சரியாக தலைக்கு மேலே தினமும் வருவது இல்லை. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே ஒரு இடத்தில் செங்குத்தாக நிற்கும். இதனால், ஆண்டுக்கு இருமுறை மட்டுமே ஒரு பொருளின் நிழல் சுழியத்தை எட்டும். இதனையே ‘நிழல் இல்லா நாள்’ என்று அழைப்பர்.

அந்த வகையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ‘நிழல் இல்லாநாள்’ நிகழ்வு தென்பட்டது. இதனை பள்ளி மாணவ, மாணவிகள் ஆங்காங்கே பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

இந்த நிழல் இல்லாநாள் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சுரேந்தர் கூறியது:

“மகர ரேகைக்கு 23.5 டிகிரி தெற்காகவும், கடக ரேகைக்கு 23.5 டிகிரி வடக்காகவும் உள்ள நாடுகளில் மட்டுமே இந்த நிகழ்வை காண முடியும்.

எல்லா இடங்களிலும் ஒரே நாளில் இது நிகழாது. அந்த இடத்தின் தீர்க்கரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாள்களில் நிகழும்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (நேற்று) மதியம் 12 மணிக்கு இந்த நிகழ்வை காண முடிந்தது. நாளை (இன்று) சேலம் மாவட்டத்தில் நிழல் இல்லா நாள் நிகழ்வு ஏற்படும்” என்று அவர் கூறினார்.