எமர்ஜென்சி நேரத்தில் நமக்கு கைகொடுத்து உதவும் தீயணைப்பு, போலீஸ், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அவசர உதவி எண்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. கல்வியிலும், பொருளாதாரத்திலும் முன்னிலையில் உள்ள தமிழ்நாட்டில் ஏராளமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் நிறைந்துள்ளன. அவசர காலத்தில் மக்களை காக்க மருத்துத் துறை, தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறை உள்ளது. தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக பேரூராட்சி பகுதிகளில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு விரர்கள் உடனே விரைந்து சென்று தீயணை அணைக்கின்றனர்.

இதேபோல் விபத்துகள் ஏற்பட்டாலும் உடனடியாக ஆம்புலஸ்கள் சம்பவ இடத்துக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றுகின்றன. ஆனால் எமர்ஜென்சி வேளையில் நமக்கு கைகொடுத்து உதவும் காவல்துறை, மருத்துவ உதவி மற்றும் தீயணைப்பு துறையின் அவசர உதவி எண்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை. இந்த அவசர உதவி எண்களை தெரிந்து கொண்டால் ஆபத்து காலங்களில் நம்மை மட்டுமின்றி நம்மை சுற்றியிருப்பவர்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். 

கொட்டிக்கிடக்கும் வேலை.! இன்டர்வியூ வாங்க பணி ஆணை வாங்குங்க- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

ஆகையால் இந்த செய்தியில் தீயணைப்பு துறை, ஆம்புலன்ஸ், போலீஸ் உதவி எண்கள் ஆகியவை குறித்து பார்க்கலாம். தமிழ்நாட்டின் அவசர உதவி எண்கள் இதோ:‍ 

மாநில கட்டுப்பாட்டு அறை எண்: 1070

பேரிடர் கால உதவி எண்: 1077

காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 100

ஆம்புலன்ஸ் உதவி எண்: 102 மற்றும் 108 

போக்குவரத்து காவல்துறை எண்: 103

மருத்து உதவி எண்: 104

தீ தடுப்பு, பாதுகாப்பு எண் (தீயணைப்புத்துறை) 101

விபத்து உதவி எண் : 108

விபத்து உதவி (நெடுஞ்சாலை) எண்: 1073

குழந்தைகள் பாதுகாப்பு எண்: 1098

பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி எண்: 1091

இரயில்வே உதவி எண்: 1512

கடலோர காவல் உதவி எண்: 1093

ஆபத்து காலங்களில் மேற்கூறிய துறைகளின் அவசர உதவி எண்களை நீங்கள் அழைக்கும்போது உங்களுக்கு கண்டிப்பாக உதவிகள் கிடைக்கும். ஆகவே இந்த எண்களை குறித்து வைத்துக்கொண்டு உங்களையும், உங்களை சுற்றியுள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

IT Hub: இந்தியாவின் 'ஐடி ஹப்' ஆக மாறும் கோவை! டேட்டாவை பார்த்தா அசந்து போவீங்க!