weavers protest withdraw
கடந்த 23 நாட்களாக நடைபெற்று வந்த விசைத்தறியாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்ததால் விசைத்தறியாளர்கள் 23 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து கோவையில் மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் தலைமையில் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் விசைத்தறியாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் கூலி உயர்வு வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்புதல் அளித்தனர்.
இந்நிலையில், விசைத்தறியாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
