We have won not only the image but also the deeds
சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தை அடுத்த குண்டிருசன்பாளையம் கிராமத்தை சோந்தவர் மாணிக்கம். டெய்லர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு கார்த்திகா, கீர்த்திகா என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் இரட்டையர்கள்.
கார்த்திகா, கீர்த்திகா ஆகியோர் கொங்கணாபுரம் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து, பொது தேர்வு எழுதினர். இதன் முடிவு நேற்று வெளியாகி, இருவரும் தேர்ச்சி பெற்றனர்.
ஒரே உருவ அமைப்பில் இருந்து ஆச்சரியம் அடைய செய்து வரும் அவர்கள், பிளஸ் 2 தேர்வில் ஒரே மதிப்பெண்ணை (1117) பெற்று ஆச்சரியம் அடைய செய்துள்ளனர்.
இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், ஒரே உருவ அமைப்பில் மட்டுமின்றி, எங்களது எண்ணமும், செயலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதை போலவே எங்களது பிளஸ் 2 மதிப்பெண்ணும் கிடைத்துள்ளது.
மேலும், எதிர் வரும் காலங்களில் நாங்கள் இருவரும் ஒரே கல்லூரியில், ஒரே துறையில் படித்துஅதிலும் சாதனை செய்வோம் என்றனர்.
