சென்னை முதல் சேலம் வரையிலான விமான சேவை 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இன்று துவங்கப் பட்டது

விமான சேவை துவக்கவிழாவில் முதல்வர் எடப்பாடி.பழனிசாமி அவர்களையும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஜி அவர்களையும், திரு.இல.கணேஷன் ஜி அவர்களையும் மற்றும் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஜி & மாநில நிர்வாகிகள் அனைவரையும் கலந்துக்  கொண்டனர்

அப்போது பேசிய தமிழக முதல்வர்,

விமான சேவையால் சேலத்தை சுற்றியுள்ள நகரங்கள் வளர்ச்சி அடையும் என்றும் சேலம்- சென்னை விமான சேவையால் நாமக்கல் ராசிபுரம், ஈரோடு பகுதிகளில் தொழிற்வளர்ச்சியடையும்,

62000 தொழிற் முதலீட்டை தமிழகம் ஈர்த்துள்ளதால் விமான சேவை முக்கியத்துவம் பெறுகின்றது என்று  முதல்வர்  பழனிசாமி தெரிவித்தார்.

7 ஆண்டுகளுக்கு முன்  சேலத்தில் விமான சேவை தொடங்கப்பட்ட போது மக்களிடையே நல்ல  வரவேற்பு  கிடைக்காததால்,தொடங்கப் பட்ட 3 வாரத்திற்கு  மேல், சேவை வழங்கப் படவில்லை.

ஆனால் இனி  நல்ல வரவேற்பு இருக்கும் பட்சத்தில்,விமான சேவை தொடர்ந்து வழங்க திட்டம்  வகுக்கப்பட்டு உள்ளது.மேலும் தமிழகம் முதலவரின் சொந்த ஊரும்  சேலம் என்பது குறிப்பிடத்தக்கது.