25-ம் தேதிக்கு பின்  தமிழகத்தில் மழை..! வெதர்மேன் சொல்கிறார்..!

தமிழகத்தில் வரும் 25-ம் தேதிக்கு மேல் மிதமான  மழைக்கு வாய்ப்பு உள்ளது என வெதர்மேன் பிரதீப் ஜான்  தெரிவித்து உள்ளார்

தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகம் மற்றும் சென்னையில் அடுத்த ஒரு வார காலத்துக்கு தற்போது இருப்பதுபோல் இயல்பான நிலையிலேயே வெப்பநிலை இருக்கும். அல்லது ஒரு டிகிரி செல்சியஸ் அளவு குறையலாம்.

தென் தமிழக்தில் குறிப்பாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி பகுதியில் வெப்பநிலை ஒரு டிகிரி முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இந்த காலநிலையை அனுபவியுங்கள், வெயில் அதிகமாக இருக்கும் என்று நினைக்கத் தேவையில்லை.

தென் தமிழகத்தைப் பொருத்தவரை வரும் 25-ம் தேதிக்கு பின் மிதமான மழை இருக்கும். பெரிய அளவிலான மழையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், இலங்கைக்கு நல்ல மழை இருக்கும்.

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

எனவே இன்னும் இரண்டு நாட்களில் தமிழகத்தில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம்.