Asianet News TamilAsianet News Tamil

பவானிசாகர் அணை நீர் திறப்பு.. முதல் போக பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறப்பு..

பவானிசாகர் அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக காலிங்கராயன் வாய்க்காலுக்கு இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 
 

water Opening today from bhavani sagar dam
Author
Tamilnádu, First Published Jun 16, 2022, 11:29 AM IST

பவானிசாகர் அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக காலிங்கராயன் வாய்க்காலுக்கு இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதுக்குறித்து நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் முதல் போக பாசனத்துக்கு இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். 

மேலும் படிக்க: பரோட்டா குருமாவில் பல்லி.. சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அட்மிட்.. ஓட்டலுக்கு அதிரடியாக சீல்.!

இதனால் ஈரோடு மாவட்டம் பவானி, ஈரோடு , மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களிலுள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்க்ள் பாசன வசதி பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் 5,184 மில்லியன் கன அடிக்கு மிகாமல், இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது. 

இதனிடையே கடந்த 2 நாட்களாக பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 1,988 கன அடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.66 அடியாக உள்ள நிலையில், தற்போது அணையில் 17.1 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. அதே சமயம் அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்காக 1,005 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நாளை 10 ஆம் வகுப்பு ரிசல்ட்.. மாணவர்கள் எவ்வாறு முடிவுகளை தெரிந்துக்கொள்ளுவது..? முழு விபரம்..

Follow Us:
Download App:
  • android
  • ios