மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப்படத்தை இயக்குனர் நாக் அஷ்வின் என்பவர் இயக்கி வருகிறார். தமிழில் 'நடிகையர் திலகம்' என்றும் தெலுங்கில் 'மாகநதி' என்றும் உருவாகும் இந்த படத்தில், சாவித்திரி கதாப்பாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சாவித்திரி படத்தில் நடிக்க, கீர்த்தி சுரேஷுக்கு தகுதி இல்லை என்று சாவித்திரியுடன் பல படங்களில் நடித்தவரும், அவரது தோழியுமான ஜமுனா கூறியுள்ளார்.

நடிகை ஜமுனா பேசும்போது, நான் 200-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறேன். தற்போது சாவித்திரியுடன்  நடித்தவர்களில் நான் மட்டுமே உயிரோடு இருக்கிறேன். சாவித்திரியை பற்றி மற்றவர்களை விட தனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவரை பற்றி என்னிடம் எதுவும் கேட்காமல் அவருடைய வாழ்க்கையைப் படமாக்குவது வேதனையாக உள்ளது.

தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், மகாநதி என்று தெலுங்கிலும் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசன் வேடத்தல் துல்கர் சல்மானும் நடிக்கின்றனர்.

நடிகை ஜமுனாவின் பேச்சால், நடிகை கீர்த்தி சுரேஷ் வருத்தம் அடைந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது படத்தைப் பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.