warning to people due to broked shutter in krishnagiri
கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆா்.பி.அணையின் மதகு ஒன்றில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அதிக அளவில் திடீரென தண்ணீர் வெளியேறி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், உடைந்த மதகு மற்றும் வெளியேறும் தண்ணீரை பார்வையிட்டார்

அணையில் இருந்து தண்ணீர் வேகமாக வெளியேறி வருவதால், தென்பெண்ணையாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் ஆற்றில் குளிக்கவோ அல்லது ஆற்றைகடக்கவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்
இதற்கு முன்னதாக கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆா்.பி. அணையின் மதகு சரியான முறையில் பராமரிக்க படாமல் இருந்துள்ளது.இந்நிலையில் தொடர் மழை காரணமாக அணைக்கு வந்த நீரின் அளவு அதிகரித்து வந்ததால், நீரின் அழுத்தம் தாங்காமல் திடீரென அணையின் ஒரு மதகு உடைந்தது

மதகு உடைந்ததால் ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீர்
மேலும், தென்பெண்ணை ஆற்றின் மூலமாக திருவண்ணாமலை கிருஷ்ணகிரி மாவட்ட விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே குறைவான அளவில் தண்ணீர் வெளியேறி வந்த நிலையில், தற்போது ஒரு மதகு மட்டும் தண்ணீர் அழுத்தம் தாங்காமல் திடீரென உடைந்ததால்,வெள்ளம் ஆர்ப்பரித்து வெளியேறும் காட்சியை காண அப்பகுதி மக்கள் அணையை பார்க்க திரண்டுள்ளனர்
