Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வு விவகாரத்தில் ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும் - பிரதமரை வலியுறுத்திய எடப்பாடி...

want president approval in neet exam issues
want president-approval-in-neet-exam-issues
Author
First Published Apr 26, 2017, 4:57 PM IST


தமிழக அரசின் நீட் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதலை பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு இல்லை என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு குறித்து மசோதா நிறைவேற்றப்பட்டது.

want president-approval-in-neet-exam-issues

ஆனால் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனிடையே 'நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் தேர்வால் தமிழகத்தைச் சேர்ந்த 98 % மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழக அரசின் நீட் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதலை பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios