அரியலூரில், முன்விரோதம் காரணமாக, ஒருவரை சரமாரியாக தாக்கிய நான்கு பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

ஆண்டிமடம் அருகே உள்ள கீழநெடுவாய் கிழக்கு தெருவைச் சேர்ந்த விவசாயி ஞானமுத்து பாலையா (47). இவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த கிரவுன் மேத்யூ, ஸ்டான்லி அலெக்ஸ், சூடிங் அன்பிட் ராஜ்,எட்வின் மிசியா ஆகிய நான்கு பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி இரவு ஞானமுத்து பாலையாவின் மனைவியிடம் மேற்கண்ட நான்கு பேரும் தகராறில் ஈடுபட்டனர்.

இதனையறிந்த ஞானமுத்து பாலையா தட்டிக் கேட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த அந்த நான்கு பேரும், ஞானமுத்து பாலையாவை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் ஞானமுத்து பாலையா பலத்த காயமடைந்தார். பின்னர், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின்பேரில், அந்த நான்கு பேரையும் காவலாளர்கள் வழக்குப் பதிவ்ய் செய்து கைது செய்தனர்.