பரபரப்பு.. ! தமிழகத்தையே உலுக்கிய விருதுநகர் பாலியல் வன்கொடுமை.. கைதானவருக்கு ஜாமீன்.. நீதிபதி உத்தரவு..

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 சிறுவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.  
 

Virudhunagar sexual assault case- Bail for the arrested

விருதுநகரில் 22 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுவர்கள் நால்வரும் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற 4 பேர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினர். 

சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி தலைமையிலான குழு விசாரணையில் இறங்கியது. முதலில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் 2 நாள்கள் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கைதான 8 பேரின் வீடுகள் மற்றும் சம்பவ நடந்த இடங்களிலும் சோதனையை சிபிசிஐடி போலீசார் நடத்தினர். அதனையடுத்து, வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 பேரையும் போலீஸ் காவலில் விசாரிக்க திட்டமிட்டது.மேலும் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரின் வீடுகளில் நடத்தப்பட சோதனையில் கைப்பற்றப்பட்ட செல்போன், மெமரிகார்டு, லெப்டாப் ஆகியவை ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளது. 

பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.  சம்பவம் நடந்த மருந்து குடோனுக்கு நேரில் அழைத்து வந்து டிஎஸ்பி வினோதினி தலைமையில்  சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, 4 மாணவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 சிறுவர்களுக்கு சிறார் நிதி குழும நீதிபதி மருதுபாண்டியன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக ஹரிஹரன் உள்ளிட்ட நால்வரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios