Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவால் நிறுத்தப்பட்ட விழுப்புரம்-புதுச்சேரி ரயில் சேவை… இரண்டரை ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடக்கம்!!

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட விழுப்புரம்-புதுச்சேரி இடையிலான ரயில் சேவை இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

villupuram puducherry train service resumes after two and a half years
Author
Viluppuram, First Published Jul 12, 2022, 8:01 PM IST

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட விழுப்புரம்-புதுச்சேரி இடையிலான ரயில் சேவை இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவல் தீவிரமடைந்த காலக்கட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதிலும் குறிப்பாக பேருந்து, ரயில், விமான போக்குவரத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டன. இந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு இயக்குப்பட்டு வந்த சாதாரண பயணிகள் ரயில் போக்குவரத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: தனியார் மயமாகும் போக்குவரத்து கழகம்..? 1.20 லட்சம் ஊழியர்களின் கதி என்ன.?? தலையில் அடித்து கதறும் சீமான்.

தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு சாதாரண பயணிகள் ரயிலுக்கு பதிலாக தினசரி விரைவு ரயில் போக்குவரத்து வரும் ஜூலை 11 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 5.50 மணிக்கு புதுச்சேரி நோக்கி ஆண்டுகளுக்கு பிறகு புறப்பட்டு சென்றது.

இதையும் படிங்க: விமானத்தையே தூக்கிச் செல்லும் திமிங்கல பெலுகா ஏர்பஸ் விமானம்: சென்னை விமானநிலையம் வந்தது ஏன்?

இதில் பயணிகள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர். தினந்தோறும் விழுப்புரத்தில் இருந்து காலை 5.30 மணிக்கும், மாலை 5.50 மணிக்கும் விரைவு ரயில் புதுச்சேரிக்கு இயக்கப்படுகிறது. அதே போல் மறு மார்க்கத்தில் புதுச்சேரியில் இருந்து காலை 8.10 மணிக்கும், இரவு 8.35 மணிக்கும் விழுப்புரத்திற்கு விரைவு ரயில் இயக்கப்படுகிறது. சுமார் 2 1/2 ஆண்டுகளுக்கு பிறகு விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios