புகழ் பெற்ற வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் (93) வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம்

நெல்லை சத்திர புதுக்குளத்தில் 1928 ஆம் ஆண்டுபிறந்த சுப்பு ஆறுமுகம், தனது வில்லுப் பாட்டின் மூலமாக சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே ஆன்மீகம், தேச பக்தியை வளர்த்தவர். தனது 14-வது வயதில் குமரன் பாட்டு கவிதை தொகுப்பு மூலமாக பிரபலமடைந்தார். என்.எஸ்.கிருஷ்ணன் உதவியால் சென்னையில் தங்கி கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை முதன்முதலாக வில்லுபாட்டாக பாடி மக்களை கவந்தார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 19 படங்கள், நாகேஷின் 60 படங்களுக்கு நகைச்சுவை பகுதிகளை எழுதியுள்ளார். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் வில்லுப்பாட்டு பாடி மக்களிடையே கொண்டு சேர்த்தார். காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, திலகர் கதை, புத்தர் கதை என ஏராளமான வில்லுப்பாட்டுகளை இசைத்துள்ளார் சுப்பு ஆறுமுகம்

இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..! பங்கேற்பார்களா தென் மாவட்ட நிர்வாகிகள்..?

உடல்நலக்குறைவால் காலமானர்

இவரது இசைப்பணியைப் போற்றும் வகையில் 1975ஆம் ஆண்டு கலைமாமணி விருதையும், 2005ஆம் ஆண்டு மத்திய அரசின் சங்கீத அகாடமி விருது வழங்கப்பட்டது. 2021ல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது.இந்த நிலையில், வயது முதிர்வின் காரணமாக சென்னை கே.கே. நகரில் உள்ள அவரது இல்லத்தில் சுப்பபு ஆறுமுகம் (93) இன்று காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்

பிளாட்பாரத்தில் பொறிபறந்த பட்டாக்கத்தி.. ரயில் பயணிகளை மிரளவைத்த மாணவர்கள்.. என்ன செய்ய போகிறது காவல்துறை?