இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் இரண்டு மாதங்களாக குடிநீர் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனால் பெண்கள் திரளாக வட்டார வளர்ச்சிக்கு சென்று முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

இதுநாள் வரை ஊரில் இருந்த கிணற்றின் மூலம் தண்ணீர் எடுத்து வந்தோம். ஆனால், தற்போது அந்த கிணறும் வற்றிவிட்டது. ஒரு குடம் தண்ணீர் கிடைக்க பலமணி நேரம் பயணம் செய்து தண்ணீர் கொண்டு வருகிறோம். எனவே, எங்களது கிராமத்தின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதனையேற்று கொண்டு திரளாக வந்த பெண்கள் கலைந்து சென்றனர்.