Asianet News TamilAsianet News Tamil

Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்.. பாமக சார்பில் அன்புமணி போட்டி!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

Vikravandi By Election...Anbumani contest on behalf of PMK tvk
Author
First Published Jun 15, 2024, 11:50 AM IST | Last Updated Jun 15, 2024, 12:06 PM IST

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஜூலை 13ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: சொந்த மாவட்டத்தில் சி.வி. சண்முகத்தின் இமேஜை டேமேஜ் செய்ய வெயிட்டான வேட்பாளரை களம் இறக்கும் பாமக!

இந்நிலையில், இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா? அல்லது பாமக போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். 

இதையும் படிங்க:  7 மாசமா ஊதியம் வழங்கலனா எப்படி குடும்ப செலவுகளை கவனிக்க முடியும்? கொஞ்சம் சிந்தியுங்கள்! ராமதாஸ் ஆவேசம்!

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் பாமக மாநில துணைத் தலைவராக இருந்து வருகிறார். இதுவரை இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில் இருந்து விலகி இருந்த பாமகவை இந்த முறை விக்கிரவாண்டி தொகுதியில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios