- Home
- Gallery
- சொந்த மாவட்டத்தில் சி.வி. சண்முகத்தின் இமேஜை டேமேஜ் செய்ய வெயிட்டான வேட்பாளரை களம் இறக்கும் பாமக!
சொந்த மாவட்டத்தில் சி.வி. சண்முகத்தின் இமேஜை டேமேஜ் செய்ய வெயிட்டான வேட்பாளரை களம் இறக்கும் பாமக!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக பாமக போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்ட நிலையில் அங்கு யாரை வேட்பாளராக களம் இறங்கினால் சி.வி.சண்முகத்தின் செல்வாக்கை காலி செய்ய முடியும் என அன்புமணி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்

Vikkaravandi By Election
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. ஜூலை 13ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Anniyur Siva
இந்நிலையில் ஆளுங்கட்சியான திமுக முதல் ஆளாக விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.
இதையும் படிங்க: Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி.!
CV Shanmugam
அதிமுக சார்பில் முன்னான் அமைச்சர். சி.வி.சண்முகம் கைகாட்டும் நபரே வேட்பாளராக அறிவிக்கப்படுவார். தொடர் தோல்வியால் துவண்டு போய் உள்ள அதிமுகவினருக்கு இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் எப்படியாவது போன இமேஜை மீட்டு விடலாம் என கணக்கு போட்டு வருகிறது.
Anbumani Ramadoss
அதே நேரத்தில் இதுவரை இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில் இருந்து விலகி இருந்த பாமக இந்த முறை விக்கிரவாண்டி தொகுதியில் களமிறக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். பாமக செல்வாக்கு மிக்க தொகுதியான விக்கிரவாண்டியில் போட்டியிட்டால் திமுக - தேசிய ஜனநாயக கூட்டணிக்குமான போட்டியாக மாற்றி அதிமுக மூன்றாவது இடத்து தள்ளிவிடலாம் என அண்ணாமலை கணக்கு போட்டு வருகிறார். பாமக நிர்வாகிகளுடன் அன்புமணி நேற்று தைலாப்புரத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது யாரை வேட்பாளராக நிறுத்தினால் சரியாக இருக்கும் ஆலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: DMK : அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து திடீர் நீக்கம்.! - காரணம் என்ன தெரியுமா.?
CV Shanmugam Vs Anbumani
இதில், பாமக வேட்பாளர்கள் ரேசில் முன்னாள் மாவட்ட செயலாளரான புகழேந்தி, கடந்த முறை தனித்து போட்டியிட்டு 41 ஆயிரம் வாக்குகளை பெற்றார். வன்னியர் சங்க நிர்வாகி அன்புமணி, மாநில நிர்வாகி பழனிவேல் உள்ளிட்டவர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாம். இவர்களில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகலையான புகழேந்திக்குத்தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் சி.வி.சண்முகத்தின் செல்வாக்கை ஒடுக்க பாமக அதிரடி வியூகம் வகுத்து வருகிறதாம். ஆகையால் இந்த இடைத்தேர்தல் எப்போதும் இல்லாத வகையில் கடும் போட்டி இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.