சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வு செய்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் வார்டிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு காய்ச்சல் வெகு வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக அரசாங்கம், டெங்குவில் இருந்து தப்பிப்பது குறித்து ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்குவால் பாதிக்கப்பட்ட மருத்துனைகளில் ஆய்வு செய்து வருகிறார். இன்று புதுக்கட்டை அரசு மருத்துவமனைக்கு சென்ற விஜயபாஸ்கர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் வார்டில் அவர் ஆய்வு நடத்தினார்.

அப்போது, டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் தடுப்பு சிகிச்சை குறித்தும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார். பின்னர், ஆலங்குடி ஆண்கள் மேல்நிலை பட்ளளியில் நிலவேம்பு கசாயம் வழங்கிய அவர், டெங்கு விழிப்புணர்வு பேரணியைத் துவக்கி வைத்தார். 

அப்போது, பொதுமக்களும் மாணவர்களும் டெங்கு தொடர்பான உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார்.