சர்கார் திரைப்படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்சும், நடிகர் விஜயும் சிகரெட் உற்பத்தி நிறுவனங்களிடம் கோடி கோடியாக பணம் வாங்கியிருப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில், நேற்று பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ், சர்கார் திரைப்படத்தின் விளம்பரத்தில், நடிகர் விஜய் புகை பிடிப்பது மாதிரியான படத்தை பார்த்ததும் தனக்கு ஆத்திரம் வந்ததாக தெரிவித்தார். 

தான் பழைய ராமதாசாக இருந்திருந்தால் சர்க்கார் திரைப்படம் எந்த திரையரங்கிலும் ஓட முடியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள் என தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன் என்று ராமதாஸ் மிரட்டல் விடுக்கும் பானியில் பேசினார். ஆனால் தற்போது சர்கார் படத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம்பெறக்கூடாது என்று விஜய் மற்றும் சன் பிக்சர்சுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் ராமதாஸ் தெரிவித்தார்.

முன்னதாக 'சர்க்கார் திரைப்படம் சம்பந்தமான பார்ஸ்ட் லுக்கில் நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டர்  வெளியானது உடனே இதை  அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.