பைரவா படம் கேரளாவில் ரிலீஸ் ஆகாது என்று நினைத்து விஜய் ரசிகர் விசம் குடித்து தற்கொலைச் செய்து கொண்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் எவ்வளவு பிரச்சனை இருக்கு. தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டான சல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று இளைஞர்கள், மக்கள் என போராட்டம் நடத்துகின்றனர்.

தண்ணீரின்றி பயிர்கள் கருகுவதைக் கண்டு விவசாயிகள் இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இன்னும், விவசாயிகள் பெரும் துயரத்தில் வாடுகின்றனர்.

ஆற்று மணல் கொள்ளையடிக்கப்பட்டு, தமிழகத்தின் வளங்கள் சூறையாடப்படுகின்றன.

கனிம வளங்கள், கிராணைட் கொள்ளையடிக்கப்படுகின்றன.

செல்லாத நோட்டு அறிவிப்பால் 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இன்னமும், அந்த அறிவிப்பால் மக்கள் வங்கி, ஏ.டி.எம் முன்பு வரிசையில் நின்று புத்தாண்டையும், பொங்கலையும் கொண்டாட முடியாமல் தவிக்கின்றனர்.

இப்படி நாடு முழுவதும், ஏராளமான பிரச்சனைகளால் நாளுக்கு நாள் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஆனால், கேராளாவில் விஜயின் பைரவா படம் ரிலீஸ் ஆகாது என்று நினைத்து விஜய் ரசிகர் மன்ற குமரி மாவட்ட தலைவர் விசம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நூறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள்! நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர். இளைஞர்கள் தான் நாட்டின் மிகப்பெரிய சக்தி என்றார் அப்துல் கலாம். இப்படி பல்வேறு தலைவர்கள் இளைஞர்களின் சக்தியை உலகுக்கு தெரிவிக்கின்றனர்.

ஆனால், இந்த இளைஞன் கேவலம் ஒரு படம் ரிலீஸ் ஆகாது என்று தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

உண்மையில் பைரவா படம் 203 கேராள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த தகவல் கூட தெரியாமல் இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரெல்லாம் என்ன விஜய் ரசிகரோ!!!