மிலாடி நபியில் படுஜோராக நடந்த மது விற்பனை.. கண்டுகொள்ளாத தமிழக அரசு அதிர்ச்சியில் பொதுமக்கள்

இன்று மிலாடி நபி என்பதால், அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

Vigorous sale of alcohol liquors on miladi nabi peoples shocked

தமிழகம் முழுவதும் மிலாடிநபி தினத்தையொட்டி அரசு மது கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் மிலாடி நபியையொட்டி இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மிலாடி நபி என்பதால், அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோராக நடந்துள்ளது என்று பல்வேறு இடங்களில் புகார்கள் வரிசையாக வந்துள்ளது.

Vigorous sale of alcohol liquors on miladi nabi peoples shocked

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மது பான கடை விடுமுறையை பயன்படுத்தி மது பார்களில் காலை முதலே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது. கோவை மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் மது விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க..‘ஈபிஎஸ் அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவிய முக்கிய விக்கெட்.. அதிர்ச்சியில் எடப்பாடி தரப்பு !’

அன்னூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் கணேசபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஏராளமான குடிமகன்கள் அதிக விலைக்கு சட்ட விரோதமாக விற்கப்படும் மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர். சிலர் சாலையிலேயே மது அருந்துவதால்  பொதுமக்கள் முகம் சுளித்தவாறு செல்கின்றனர். அன்னூர் போலீசாரும் சட்டவிரோத மது விற்பனையை கண்டு கொள்வதில்லை என கூறுகிறார்கள்.

Vigorous sale of alcohol liquors on miladi nabi peoples shocked

கட்டுப்பாடற்ற மது விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மிலாது நபி உள்ளிட்ட நாட்களில், விதிமுறை மீறி மது விற்பனை நடைபெறுவதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிகள் மற்றும் குடியிருப்புகள் அதிகம் உள்ள இப்பகுதியில் மது கடை அமைக்க எழுந்த எதிர்ப்புகளுக்கும் மத்தியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு மது கடை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுக்கவே இதுபோன்ற குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இதையும் படிங்க..‘இபிஎஸ் செய்த 41 ஆயிரம் கோடி ஊழல்.. ஓபிஎஸ் கையெழுத்து போடுவார் !’ அதிமுக பிரமுகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios