vellore accident...7 persons killed

வேலூர் ரத்தினகிரி அருகே 3 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை-பெங்களூரு இடையே இருவழித்தடத்தில் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்று மாலை வேலூரிலிருந்து ஆற்காடு நோக்கி பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. 

ரத்தினகிரியை அடுத்த நந்தியாலம் என்னும் இடம் அருகே கார் சென்றது. அப்போது அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரவிச்சந்திரன் என்பவர் வேலூர் செல்வதற்காக சென்னை-பெங்களூரு சாலையில் மோட்டார் சைக்கிளில் சாலையின் குறுக்காக கடக்க முயன்றார்.



விபத்து குறித்து தகவல் அறிந்த ரத்தினகிரி போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் 6 பேர் இறந்தனர். மேலும் மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் படுகாயம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர் ரவிச்சந்திரனும் உயிர் இழந்தார்.

இந்த விபத்தால் சென்னை-பெங்களூரு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நின்றன. இந்த விபத்து குறித்து ரத்தினகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.