15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கனும், இல்லைனா..2 கோடி ரூபாய் இழப்பீடு தரனும்! சீமானுக்கு வீரலட்சுமி எச்சரிக்கை

தன்னைப்பற்றி அவதூறான கருத்துகளை தெரிவித்து வரும் சீமான் மற்றும் அவரது கட்சியினர் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்படும் என சீமானுக்கு வீரலட்சுமி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Veeralakshmi lawyer has sent a notice to Seeman seeking an apology KAK

சீமான் மீது விஜயலட்சுமி புகார்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு  பாலியல் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து சில நாட்களில் அந்த புகாரை திரும்ப பெற்ற அவர் சமூக வலைதளத்தில் அவ்வப்போது சீமானை விமர்சித்து வந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் சீமான் மீதான புகார் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. சீமான் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விஜயலட்சுமி மீண்டும் ஒரு பரபரப்பு புகார் அளித்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கற்பமாக்கியதாகவும், 5 முறை கருக்கலைப்பு செய்தததாகவும் தெரிவித்து இருந்தார்.

Veeralakshmi lawyer has sent a notice to Seeman seeking an apology KAK

சீமான்- வீரலட்சுமி மோதல்

அப்போது நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியும் உடன் வந்திருந்தார். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியினருக்கும், வீரலட்சுமிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் தன்னை அவதூறு செய்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வீரலட்சுமி சார்பாக அவரது வழக்கறிஞர் அனுப்பிய நோட்டீஸில், வீரலட்சுமியை தமிழர் அல்லாதவர் என சீமான் பொது வெளியில் பேசியுள்ளதாகவும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு புகாய் அளிக்க வந்தபோதும், திருவள்ளூர் வீர ராகவர் கோவிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ள வந்த போதும், வீரலட்சுமியை நாம் தமிழர் கட்சியினர் அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசியதாக தெரிவித்துள்ளார். 

Veeralakshmi lawyer has sent a notice to Seeman seeking an apology KAK

மன்னிப்பு கேட்க கோரி வக்கீல் நோட்டீஸ்

வீரலட்சுமியின் தாய் மொழி தெலுங்கு எனவும், சமுதாயம் நாயுடு எனவும் நாம் தமிழர் கட்சியினர் அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாகவும்,  வக்கீல் நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களில் சீமான் வீரலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லை என்றால் சீமானால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு அவரிடம் இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

எடப்பாடி பக்கத்தில் ஓபிஎஸ்க்கு இருக்கையா.? சீறும் அதிமுக.! சபாநாயகரை மீண்டும் சந்தித்த மாஜி அமைச்சர்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios