Asianet News TamilAsianet News Tamil

அம்பேத்கரின் சிந்தனை கொண்டவர் அவர்.. நிச்சயம் அரசியல் கட்சியில் சேரனும் - பிரகாஷ் ராஜை புகழ்ந்த திருமாவளவன்!

Prakash Raj : தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக "விசிக" விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவ்வாண்டு நடிகர் பிரகாஷ்ராஜுக்கு சிறப்பு விருந்து ஒன்று வழங்கப்பட்டது.

VCK Party Leader presented Ambedkar Sudar award to actress prakash raj ans
Author
First Published May 26, 2024, 4:32 PM IST

தனது 60-வது வயதை நோக்கி பயணித்து வரும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான பிரகாஷ்ராஜ், கடந்த 1990ம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். தமிழில் கடந்த 1994ம் ஆண்டு பிரபல இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான இளைய திலகம் பிரபுவின் "டூயட்" திரைப்படம் மூலம் அறிமுகமானார். 

தமிழ் திரை உலகில் இவர் வில்லனாக எதிர்கொள்ளாத ஹீரோக்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு தனக்கே உரித்தான உடல் மொழியில் வில்லனாகவும், ஹீரோவாகவும். குணச்சித்திர நடிகராகவும் கடந்து சில வருடங்களாக மிக சிறந்த தந்தையாகவும் நடித்து பல விருதுகளை குவித்து வருகிறார் மூத்த நடிகர் பிரகாஷ் ராஜ்.

வன்மத்தைக் கக்குகிறார்கள்.. வதந்திகளைப் பரப்புகிறார்கள்.. தோல்வி பயத்தில் குரல் நடுங்குவது தெரிகிறது- ஸ்டாலின்

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழங்கும் ஒரு சிறப்பு விருது அவருக்கு கிடைத்திருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் அந்த கட்சி இயங்கி வருகின்றது. மேலும் தேர்தலை எதிர்கொள்வதற்காக தங்களை தாங்களே அக்கட்சிணர் பலப்படுத்திக் கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் "விசிக விருது" வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகின்றது. மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, தமிழக முதல்வர் ஸ்டாலின். கேரள முதல்வர் பினராயி விஜயன். திராவிட கழக தலைவர் கி வீரமணி உள்ளிட்ட பலரும் இந்த விருதுகளை இதற்கு முன்னதாக வாங்கியிருக்கின்றனர். 

இந்த சூழ்நிலையில் இந்த 2024 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கடந்த மாதம் 29ம் தேதி அறிவிக்கப்பட்டது. தற்பொழுது இந்த விழா நடந்து முடிந்துள்ள நிலையில், பிரபல நடிகர் பிரகாஷ்ராஜுக்கு "அம்பேத்கர் சுடர்" விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை வழங்கி பிரகாஷ்ராஜ் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தலைவர் தொல் திருமாவளவன்.

மதவாத பாசிசத்திற்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுக்கும் வெகு சில நல்ல கலைஞர்களை பிரகாஷ் ராஜ் அவர்களும் ஒருவர். அவருக்கு இந்த "அம்பேத்கர் சுடர்" விருது வழங்குவதில் விடுதலை சிறுத்தை கட்சி பெருமை அடைகின்றது. மிகச் சிறந்த மொழி வளமை மிக்க பிரகாஷ்ராஜ், அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்ற மாமனிதர்களின் சிந்தனையை கொண்டவர். அவர் நிச்சயம் ஒரு அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறி அவரை பாராட்டியுள்ளார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுங்கள்.!! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பறந்த கடிதத்தால் பரபரப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios